ஐதராபாத்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், 7 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி செல்கிறது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 237 ரன்கள், இந்தியா 503 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. கோவன் (26), வாட்சன் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜடேஜா அசத்தல்: நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த, ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (9) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் கிளார்க் (16) ஜடேஜா "சுழலில்' சரணடைந்தார். எதிர்முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவன் (44) ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். மேக்ஸ்வெல் (8) ஏமாற்றினார். பின் வந்த ஹென்ரிக்சை (0) ஜடேஜா "ரன்அவுட்டாக்க', நான்காவது நாள் உணவு இடைவேளைக்கு முன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து தடுமாறிவருகிறது. வேட் (3), அவுட்டாகாமல் இருந்தனர்.
tags: india,first place india,இந்திய கிரிக்கெட் புஜரா
Post a Comment