FLASH NEWS :
Showing posts with label வர்த்தகம். Show all posts
Showing posts with label வர்த்தகம். Show all posts

சர்வதேச சிம் கார்டு அறிமுகம்.



சர்வதேச சிம் கார்டு அறிமுகம்:




வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் பயணிகளுக்கு உதவும் வகையில் சர்வதேச சிம் கார்டு மும்பையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹாட்மெயில் இ-மெயிலை உருவாக்கிய சபீர் பாட்டியாவின் கூட்டு முயற்சி இந்த ஜாக்ஸ்டர் சிம் கார்டு. இது குறித்து அவர் கூறியது: ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி இருபது லட்சம் பேர் இந்தியா வந்து செல்கின்றனர். இதில் 86 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். சர்வதேச ரோமிங் கட்டணம் மிக அதிகமாக உள்ள நிலையில், ஜாக்ஸ்டர் சிம் கார்டு இந்த வகை பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதன் விலை ரூ. 600. தற்போது சந்தையில் விற்பனையாகும் சர்வதேச சிம் கார்டுகளை நோக்கும்போது இது 70 சதவீதம் விலை குறைந்தது. அமெரிக்கா, கானடா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய இடங்களில் இதனை உள்ளூர் எண் கொண்டு உள்ளூர் அழைப்புகளுக்கும் சர்வதேச அழைப்புகளுக்கும் பயன்படுத்தலாம்.

உலகின் பிற நாடுகளில் மேலும் குறைந்த அழைப்புக் கட்டணத்துக்கு இந்த சிம் கார்டைப் பயன்படுத்தலாம். அடுத்த இரு ஆண்டுகளில் பத்து லட்சம் சிம் கார்டுகளை விற்க திட்டமிட்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.

tags:சர்வதேச சிம் கார்டு அறிமுகம்.

கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.13,994 கோடி


கடல் உணவு,ஏற்றுமதி,உணவுப் பொருட்கள்
கொச்சி:நம்நாட்டிலிருந்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கு, கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இவ்வகையில், நடப்பு, 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில், நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 14,040 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே கால ஏற்றுமதியை விட, 6.03 சதவீதம் அதிகமாகும்.
ரூபாய் மதிப்பு:ரூபாய் மதிப்பின் அடிப்படையில், ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்றாலும், அளவு மற்றும் டாலர் மதிப்பு அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது என, கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கீட்டு காலத்தில், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 6,60,703 டன்னாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 2.62 சதவீதம் குறைவாகும்.
இதே போன்று டாலர் மதிப்பின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 8 சதவீதம் சரிவடைந்து, 260 கோடி டாலராக குறைந்து உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவு நிலையால், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில் சற்று உயர்ந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
பொருள் குவிப்பு வரி:அமெரிக்க அரசு, அதன் செலவினங்களை குறைக்கும் வகையில், நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தவிர, அந்நாடு, இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருட்கள் மீது பொருள் குவிப்பு வரி விதித்துள்ளது.மேலும், ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலை மற்றும் கடன் பிரச்னைகள் போன்றவற்றால், ஒட்டு மொத்த அளவில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், கடல் உணவுப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது.
இதன் காரணமாகவே, நடப்பு முழு நிதியாண்டில், நம்நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், இவற்றின் ஏற்றுமதி, 350 கோடி டாலர் (19 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில், அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி குறையும் என, கொச்சியை சேர்ந்த கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜப்பான்:இந்நிலையில், ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்திய கடல் உணவுப் பொருட்களில், "ஆன்டி-ஆக்சிடன்ட் எதாக்ஸின்' என்ற ரசாயனம், கலந்துள்ளது என்ற பிரச்னையால், இவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதற்கு, இன்னும் தீர்வு காணப்பட வில்லை.கடந்த ஆண்டு, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, இந்தியாவிலிருந்து, கடல் உணவுப் பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்வாண்டு, மேற்கண்ட நாடுகளுக்கான ஏற்றுமதி, சிறப்பானஅளவில் அதிகரிக்கவில்லை. இது போன்ற காரணங்களும், நம்நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில், பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இறால்கள்:நம்நாட்டின் ஒட்டு மொத்த கடல் உணவுப் பொருட்கள்ஏற்றுமதி வருவாயில், இறால்களின் பங்களிப்பு, 52 சதவீதமாக உள்ளது. கணக்கீட்டு காலத்தில், இறால் ஏற்றுமதி, 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், சர்வதேச சந்தையில், "வண்ணமே' தவிர்த்த இதர கடல் உணவுப் பொருட்களின் விலை சரிவடைந்துள்ளது.
உலக சந்தையில், ஒரு கிலோ, உயர் வகை "வண்ணமே' வகை இறால் விலை, 400 ரூபாய் என்ற அளவில் உள்ளது.ஆந்திராவில், நெல்லூர், குண்டூர், கோட்டா ஆகிய இடங்களில், "வண்ணமே' இறால்கள், மே மற்றும் ஜூன் மாதங்களில் தான் அதிகளவில் உற்பத்தி யாகின்றன. ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பு ஆண்டில், மேற்கண்ட இடங்களில் இதன் உற்பத்தி, 20 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



tags:கடல் உணவு,ஏற்றுமதி,உணவுப் பொருட்கள்

ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம்

மும்பை,இந்திய பங்குச்சந்தை,வர்த்தகம், நாட்டின் பங்கு
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக ‌நேர தொடக்கத்தின் (09.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 24.61 புள்ளிகள் அதிகரித்து 19277.22 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 42.15 புள்ளிகள் குறைந்து 5776.45 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததால், சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை வாங்கினர். இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. அமெரிக்காவில் சேவை துறை வளர்ச்சி மேம்பட்டுள்ளது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அதிகரித்து காணப்பட்டது. மேலும், ஐரோப்பிய சந்தைகளிலும் பங்கு வியாபாரம், கடந்த, நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, உயர்வுடன் முடிவடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம், தகவல் தொழில் நுட்ப துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.


tags:மும்பை,இந்திய பங்குச்சந்தை,வர்த்தகம், நாட்டின் பங்கு

இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை ரூ.5 லட்சம்


புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5.06 லட்சம் கோடி ரூபாயாக (9,200 கோடி டாலர்) அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5 சதவீதமாக அதிகரிக்கும் என, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் தெரிவித்துள்ளது.

Œரக்குகள்:இது, மறு மதிப்பீட்டு அளவான, 4.1 சதவீதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின், சேவைகள் மற்றும் சரக்குகள் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ளது.குறிப்பாக, கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அந்த அளவிற்கு, இந்தியாவின் ஏற்றுமதி உயரவில்லை.நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் மாத காலாண்டில், நாட்டின் , நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5.4 சதவீதமாக அதிகரித்திருந்தது. எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பே, ஒட்டு மொத்த இறக்குமதி உயர்விற்கு காரணமாகும். இது, 2014ம் ஆண்டு வரை தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், நாட்டின் எண்ணெய் இறக்குமதி, 14 ஆயிரம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, எண்ணெய் அமைச்சகத்தின் மதிப்பீட்டு அளவான (எரிவாயுவையும் சேர்த்து), 12,700 கோடி டாலரை விட அதிகமாகும்.இருப்பினும், வரும் 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.8 சதவீதமாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கணக்கீட்டு நிதியாண்டில், நிலக்கரி மற்றும் தங்கம் இறக்குமதி கட்டுக்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பங்கு முதலீடு:நாட்டின் நடப்பு கணக்கு :பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டுமானால், ரிசர்வ் வங்கி, ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதாவது, அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீட்டை அதிகரித்தல், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கடன் பத்திரங்களை வெளியிடுதல் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய கடன் பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கான உச்ச வரம்பை உயர்த்துதல் போன்றவற்றையும் நடைமுறைப் படுத்த வேண்டும்.
tags:buseness,இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை ரூ.5 லட்சம்,இந்தியாவின் நடப்பு கணக்கு
 
Support : Copyright © 2011. தற்சமயம் பராமரிப்பு பணியில் உள்ளது. - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger