FLASH NEWS :
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

தமிழ் சினிமா வேண்டாம்: இந்திக்கு செல்லும் மணிரத்தினம்?


மணிரத்தினம்,பாலிவுட்,தமிழ் சினிமா
இந்திய அளவில் பேசப்படக்கூடிய, குறிப்பிடத்தக்க சில இயக்குனர்களில், மணிரத்தினமும் ஒருவர். தமிழ், இந்தியில் அவர் இயக்கிய, "ராவணன் தமிழ், தெலுங்கில் இயக்கிய,"கடல் ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை.அதனால், தன் அடுத்த படத்தை இந்தியில் எடுக்க முடிவெடுத்துள்ளார் மணிரத்தினம்.
அப்படம்,  இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை பின்னணியாகக் கொண்ட, காதல் கதையில் உருவாகிறதாம்.
அப்படத்துக்கு, "ராவணன், குர்பான், ரங்தே பசந்தி போன்ற படங்களுக்கு கதை எழுதிய, பாலிவுட் பட இயக்குனரான, ரென்சில் டி.சில்வா என்பவரே கதை எழுதுகிறாராம். மேலும், வளர்ந்து வரும் இளைய தலைமுறை  நடிகர், நடிகைகளுக்கே, இப்படத்தில் வாய்ப்புக் கொடுக்க உள்ளாராம் மணிரத்தினம்.



tags: மணிரத்தினம்,பாலிவுட்,தமிழ் சினிமா

விஸ்வரூபம் விவகாரம்; மீண்டும் பிரச்னையை கிளப்பும் அமீர்!!

விஸ்வரூபம் ; அமீர்,இலங்கை

விடுதலைப் புலிகளை போலத்தான், தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர், அவர்களை விஸ்வரூபம் படத்தில் தப்பாக சித்தரித்துள்ளனர் என்று கூறியுள்ளார் டைரக்டர் அமீர். பிரச்னைகள் பல கடந்து, தடைகள் பல கடந்து, விஸ்வரூபம் படம் ரிலீஸாகி வசூலிலும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் புதிதாக ஒரு பரபரப்பை கிளப்பி வருகிறார் டைரக்டர் அமீர். அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள். விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் மக்களுக்காவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் ‌போராடும் போராளியை தவறாக சித்தரித்து உள்ளனர். 

இலங்கையில் ஈழத்திற்காக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் எப்படி போராடினார்களோ, அவர்களை தவறாக சித்தரித்தால் என்ன நிகழுமோ அப்படித்தான் விஸ்வரூபம் படமும். எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும், தீவிரவாதிகள் என்று சொல்ல படத்தில் காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள். இப்போது தான் அதுபற்றிய விவாதத்தை வைத்து இருக்க வேண்டும், யாரும் செய்யவில்லை. எனவே விஸ்வரூபம் படத்தில் தன் மண்ணுக்காக போராடும் தலிபான்களை, விஸ்வரூபம் படத்தில் தவறாக சித்தரித்து இருப்பது உண்மை தான் என்று கூறியுள்ளார்.  அமீரின் இந்த பேச்சு, மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்ப தூண்டுவது போல அமைந்துள்ளது.



tags:விஸ்வரூபம் ; அமீர்,இலங்கை

ஓவரா நிர்வாணம் காட்றாங்க...! - அனுஷ்கா, ப்ரியாமணி மீது பொது நல வழக்கு


அனுஷ்கா,ப்ரியாமணி,கவர்ச்சி,துக்கடா டிரஸ், நீதிமன்றத்தில் வழக்குத்,ரசிகர்களின் கூட்டம்
அனுஷ்கா-ப்ரியாமணி இருவருமே நல்ல திறமையான நடிகைகள் என்பதை சில படங்களில் நிரூபித்து விட்டார்கள். என்றாலும் அவர்களின் திறமைக்கேற்ற தீனி போடத்தான் இயக்குனர்கள் இல்லை. பெரும்பாலான இயக்குனர்கள் அவர்களின் கவர்ச்சியை குறிவைத்தே வாய்ப்புக்கொடுத்து வருகின்றனர். அப்படி நடிப்பதற்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கிறார்களாம். அதனால்தான் காசு விசயத்தில் கஞ்சத்தனம் செய்யும் கோடம்பாக்கத்தில் அடக்கிவாசிக்கும் மேற்படி நடிகைகள், ஆந்திராவில் தங்களுக்கு அள்ளிக்கொடுப்பதால், அவர்களது எதிர்பார்ப்பறிந்து கவர்ச்சியை மானாவாரியாக வாரி வழங்குகிறார்களாம்.

அந்த வகையில், தற்போது அனுஷ்கா நடிப்பில் ஆந்திராவில் வெளியான மிர்ச்சி படத்திலும், ப்ரியாமணி நடிப்பில் வெளியான டிக்கா படத்திலும் கிட்டத்தட்ட மேற்படி அம்மணிகள் கவர்ச்சியின் எல்லையையே தொட்டு விட்டார்களாம். துக்கடா டிரஸ் அணிந்து அவர்கள் நடித்ததால்,இளவட்ட ரசிகர்களின் கூட்டம் மேற்படி படங்களுக்கு அலைமோதியதாம். இதன்காரணமாக, ஆந்திரதேசத்து சமூக ஆர்வலர்கள் மேற்படி நடிகைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு பொதுநலன் கருதி, அனுஷ்கா-ப்ரியாமணி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களாம். இதனால் அனுஷ்கா-ப்ரியாமணி இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


tags:அனுஷ்கா,ப்ரியாமணி,கவர்ச்சி,துக்கடா டிரஸ், நீதிமன்றத்தில் வழக்குத்,ரசிகர்களின் கூட்டம் 

அமெரிக்க மாப்பிள்ளை தயார்... திருமணத்துக்குத் தயாராகும் அசின்?

அசின், காதல்,திருமணம்


அமெரிக்காவில் செட்டிலாகியுள்ள கோடீஸ்வர இந்திய இளைஞரை அசின் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யத் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கோலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த அசின், மும்பையில் செட்டிலாகிவிட்டார். 6 இந்திப் படங்களில் இதுவரை அவர் நடித்துள்ளார். அவற்றில் நான்கு படங்கள் ரூ 100 கோடிக்கும் மேல் வசூலித்தவை. ஆனாலும் அசின் புதிய படங்கள் எதையும் இப்போது ஒப்புக் கொள்ளவில்லை. தமிழில் மட்டும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் அவரை நடிக்க வைக்க பேசி வருகிறார்கள். இதற்கிடையே அசின் கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒரு முறையாவது அமெரிக்கா சென்று வருவது வழக்கமாகிவிட்டது. அங்குதான் அசினின் உள்ளம் கவர்ந்த இளைஞர் இருக்கிறாராம். அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், புதிய படங்களை அசின் ஒப்புக் கொள்ளாமல் தவிர்ப்பதன் ரகசியம் இதுதான் என்கிறார்கள் பாலிவுட்டில். கடைசியாக தமிழில் ஒரு படம் நடித்துவிட்டு திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட திட்டமிட்டிருக்கிறார் அசின் என்கிறார்கள்.

tags:அசின், காதல்,திருமணம்

 
Support : Copyright © 2011. தற்சமயம் பராமரிப்பு பணியில் உள்ளது. - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger