FLASH NEWS :
Home » » நான்காம் பிறை விமர்சனம்

நான்காம் பிறை விமர்சனம்


விமர்சனம்,நான்காம் பிறை




நடிகர் : கிருஷ்ணா
நடிகை : மோனல் கஜார்
இயக்குனர் :வினயன்

விமர்சனம்

இதுநாள் வரை ஹாலிவுட் படங்களிலே‌யே மனித இரத்தம் குடிக்கும் டிராகுலா எனும் ஓநாய் பேய்களை கண்டு வந்த தமிழ் ரசிகர்களுக்கு, முதன்முதலாக தமிழில் ஒரு டிராகுலா பேய் படம்! விக்ரம் நடித்து வெளிவந்த "காசி" உள்ளிட்ட தமிழ்படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் வினயனின் வித்தியாசமும், விறுவிறுப்புமான இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 3டி படம்தான் "நான்காம் பிறை!"

கதைப்படி, ருமேனியா நாட்டிற்கு, தனது ரகசிய டிராகுலா ஆராய்ச்சிக்காவும், கூடவே தன் புதுமனைவியுடனான ஹனிமூனுக்காவும் செல்லும் ராய் எனும் இளைஞனின் உடம்பில் உட்புகுந்து கொள்ளுகிறான் டிராகுலா இனத்தின் தலைவன்! இந்தியாவில் ஒரு புகழ்பெற்ற ஆன்மிகம் கம் மாந்திரீகவாதி வீட்டில் மறுபிறப்பு எடுத்திருக்கும் தன் காதல் இளவரசியை, ராய் உருவத்தின் மூலம் அடைந்து, அவளையும் கழுத்தோரம் கடித்து, டிராகுலா பேயாக்கி, தங்களது டிராகுலா உலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்பது டிராகுலா தலைவனின் திட்டம். இதற்காக ராயின் புது மனைவியில் தொடங்கி டிராகுலா இளவரசியின் அக்கா, அப்பா உள்ளிட்ட இன்னும் பலரையும் படிப்படியாக தீர்த்து கட்டும் டிராகுலா தலைவன் அலைஸ் ராயின் திட்டத்தை புரிந்து அதை முறியடிக்க முயற்சிக்கின்றனர் டிராகுலாவின் காதல் இளவரசியின் இப்பிறவி காதலன் புதுமுகம் ஆர்யன், டிராகுலா சைன்டிஸ்ட் பிரபு, மாந்திரீகவாதி நாசர் மற்றும் இளம் போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர்...! இறுதி வெற்றி யாருக்கு...? என்பது க்ளைமாக்ஸ்!!

டிராகுலா வேடத்தில் ராய் எனும் ‌கேரக்டரிலும், டிசோசா எனும் பேராசிரியர் ரோலிலும் மாறி மாறி நடிகர் சுதிர் நம்மை பயமுறுத்தி இருக்கிறார் பலே, பலே!

டிராகுலாவின் காதல் இளவரசி மோனல் கஜாரும், அவரது அழகிய அக்காவாக வந்து டிராகுலாவால் கொல்லப்படும் ஷரத்தா தாஸூம் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். 3டியில் இருந்த இருவரது அங்க அவையங்களும் நம் கண்களுக்கு நேரடி பிரமாண்டத்தையும், பிரமிப்பையும் தருவது படத்தின் பெரும்பலம்!

டிராகுலா சைன்டீஸ் பிரபு, ஆன்மிகம் கம் மாந்திரீகவாதி நாசர், டிராகுலா புகழ்பாடும் வயதான டிராகுலா திலகன், மோனல் கஜ்ஜாரின் காதலன் புதுமுகம் ஆர்யன், பிரியா, ஸ்வேதா உள்ளிட்டோரும் படத்திற்கும் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கின்றனர்.

காமெடி போலீஸ் கஞ்சா கருப்பு "கடிக்கிறார். பிரபு, நாசர் தவிர்த்து பெரும்பாலும் மாலையாள நட்சத்திர முகங்களே தெரிவது குறையாகிவிடக்கூடாது என்பதற்காக இவரது காமெடி "ஓ... சாரி கடியையும் விலிய திணித்திருப்பதை இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

சதீஷ்பாபுவின் ஒளிப்பதிவும், பிபத் ஜார்ஜின் பின்னணி இசையும் ரசிகர்களை மேலும் பயமுறுத்துவது படத்தின் பலம்! பாடல் காட்சிகள் நச் என்று இருந்தாலும் ஹாரர் படத்தில் பாட்டு - டூயட்டெல்லாம் தேவையா? எனக் கேட்க தோன்றுகிறது. சி.ஜி., கலர் கரைக்ஷ்ன் மற்றும் கிராபிக்ஸ் வேலைகளில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் "நான்காம் பிறை நம்பக்கூடிய பிறையாக இருந்திருக்கும்!

வினயனின் எழுத்திலும், இயக்கத்திலும் இன்னும் நிறைய எதிர்பார்த்தோம் என்றாலும் "நான்காம் பிறை", தமிழ் டிராகுலா ஹாரர் கதைகளுக்கான "வளர் பிறை"


tags:விமர்சனம்,நான்காம் பிறை
Share this article :

Post a Comment

 
Support : Copyright © 2011. தற்சமயம் பராமரிப்பு பணியில் உள்ளது. - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger