புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5.06 லட்சம் கோடி ரூபாயாக (9,200 கோடி டாலர்) அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5 சதவீதமாக அதிகரிக்கும் என, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் தெரிவித்துள்ளது.
Œரக்குகள்:இது, மறு மதிப்பீட்டு அளவான, 4.1 சதவீதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின், சேவைகள் மற்றும் சரக்குகள் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ளது.குறிப்பாக, கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அந்த அளவிற்கு, இந்தியாவின் ஏற்றுமதி உயரவில்லை.நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் மாத காலாண்டில், நாட்டின் , நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5.4 சதவீதமாக அதிகரித்திருந்தது. எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பே, ஒட்டு மொத்த இறக்குமதி உயர்விற்கு காரணமாகும். இது, 2014ம் ஆண்டு வரை தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், நாட்டின் எண்ணெய் இறக்குமதி, 14 ஆயிரம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, எண்ணெய் அமைச்சகத்தின் மதிப்பீட்டு அளவான (எரிவாயுவையும் சேர்த்து), 12,700 கோடி டாலரை விட அதிகமாகும்.இருப்பினும், வரும் 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.8 சதவீதமாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கணக்கீட்டு நிதியாண்டில், நிலக்கரி மற்றும் தங்கம் இறக்குமதி கட்டுக்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பங்கு முதலீடு:நாட்டின் நடப்பு கணக்கு :பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டுமானால், ரிசர்வ் வங்கி, ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதாவது, அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீட்டை அதிகரித்தல், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கடன் பத்திரங்களை வெளியிடுதல் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய கடன் பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கான உச்ச வரம்பை உயர்த்துதல் போன்றவற்றையும் நடைமுறைப் படுத்த வேண்டும்.
tags:buseness,இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை ரூ.5 லட்சம்,இந்தியாவின் நடப்பு கணக்கு
Post a Comment