சர்வதேச சிம் கார்டு அறிமுகம்.
வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் பயணிகளுக்கு உதவும் வகையில் சர்வதேச சிம் கார்டு மும்பையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹாட்மெயில் இ-மெயிலை உருவாக்கிய சபீர் பாட்டியாவின் கூட்டு முயற்சி இந்த ஜாக்ஸ்டர் சிம் கார்டு. இது குறித்து அவர் கூறியது: ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி இருபது லட்சம் பேர் இந்தியா வந்து செல்கின்றனர். இதில் 86 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். சர்வதேச ரோமிங் கட்டணம் மிக அதிகமாக உள்ள நிலையில், ஜாக்ஸ்டர் சிம் கார்டு இந்த வகை பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதன் விலை ரூ. 600. தற்போது சந்தையில் விற்பனையாகும் சர்வதேச சிம் கார்டுகளை நோக்கும்போது இது 70 சதவீதம் விலை குறைந்தது. அமெரிக்கா, கானடா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய இடங்களில் இதனை உள்ளூர் எண் கொண்டு உள்ளூர் அழைப்புகளுக்கும் சர்வதேச அழைப்புகளுக்கும் பயன்படுத்தலாம்.
உலகின் பிற நாடுகளில் மேலும் குறைந்த அழைப்புக் கட்டணத்துக்கு இந்த சிம் கார்டைப் பயன்படுத்தலாம். அடுத்த இரு ஆண்டுகளில் பத்து லட்சம் சிம் கார்டுகளை விற்க திட்டமிட்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.
tags:சர்வதேச சிம் கார்டு அறிமுகம்.
Labels:
வர்த்தகம்
அண்ணாமலை பல்கலையில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2013-14ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்சி.,(நர்சிங்), பி.பார்ம் ஆகிய படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
+2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது தேர்வெழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு அண்ணா மலைநகர் மையத்தில் மே 10ம்தேதி நடைபெறும்.
ரூ.300 வரைவோலை எடுத்து விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஏதாவது ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை மார்ச் 25ம் தேதிக்குள் Registrar, Annamalai University, annamalai nagar - 608002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விரிவான தகவல்கள் அறிய பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
tags.அண்ணாமலை பல்கலையில்;மருத்துவ படிப்பிற்கான; நுழைவுத்தேர்வு
Labels:
கல்வி
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது நாளை ஓட்டெடுப்பு
ஜெனிவா: இலங்கைக்கு எதிராக, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்தின் மீது, நாளை ஓட்டெடுப்பு நடக்கிறது.
இலங்கையில், 2009ல், ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, இறுதி கட்ட சண்டை நடந்தது. இதில், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். ஏராளமான விடுதலைப் புலிகள், ராணுவத்திடம் சரணடைந்தனர். சரணடைந்த விடுதலை புலிகள், ரகசியமான இடங்களில் வைக்கப்பட்டு, ராணுவத்தினரால், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் விடுதலை புலிகள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகவும், மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கான, மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும், நல்லிணக்க ஆணைக்குழு, சில பரிந்துரைகளை செய்திருந்தது. இந்த குழு பரிந்துரைகள் மீது, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக கூறி, கடந்த ஆண்டு, ஜெனிவாவில் உள்ள, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்தது.
இதற்கிடையே, இந்த ஆண்டும், மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர, அமெரிக்கா முடிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில், மனித உரிமை ஆணையத்தின், 22வது ஆண்டு கூட்டம் தற்போது நடக்கிறது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து, கல்லம் மக்ரே என்பவர் தயாரித்துள்ள, "நோ பயர் சோன்' என்ற ஆவணப்படம், மனித உரிமை ஆணையத்தில், திரையிடப்பட்டது. இதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. "இலங்கையில், நடந்த போர் குற்றங்கள் குறித்து, சுதந்திரமான, நம்பத் தகுந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என கூறி, மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடக்கிறது. விவாதத்தின் அடிப்படையில், சில சீர்திருத்தங்களுடன் இறுதி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, நாளை ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.
தீர்மானத்தின் அம்சங்கள்: நல்லிணக்க குழுவின் பல பரிந்துரைகளை இலங்கை அரசு ஏற்க மறுத்துள்ளது கவலையளிக்கிறது. இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை அமைப்பினர் உள்ளிட்டோர் காணாமல் போவது குறித்தும், சுதந்திரமான விசாரணை நடத்தப்படவில்லை. அதிகார பரவலாக்கத்துக்கு ஒப்புதல் அளித்த இலங்கை அரசு, தற்போது அதை செயல்படுத்த முடியாது என, மறுத்துள்ளது. இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறிப்பாக - ஆட்கள் காணாமல் போவது, கடத்தி கொலை செய்யப்படுவது, சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாக, விசாரிக்க, அங்கு செல்லும் ஐ.நா., பிரதிநிதிகளுக்கும், மனித உரிமை அமைப்பினருக்கும், இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும் என, இத்தீர்மானம் வலியுறுத்துகிறது. மூன்றாவது மற்றும் நான்காவது திருத்தத்தில், "பெண்கள் மீதான கொடுமைகள் பற்றியும் விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும்' என்பது சேர்க்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம் உள்ளிட்டவை தொடர்பாக, இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி, ஐ.நா., மனித உரிமை குழுவின் ஆணையர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கும் அக்குழுவின், 25வது கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, முதல் மற்றும் இரண்டாவது முறை திருத்தப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மூன்றாவது திருத்தத்தில், இது குறித்த இடைக்கால அறிக்கையை, "வரும் செப்டம்பர் மாதம் நடக்கும், 24வது, கூட்டத்திலேயே, சமர்ப்பிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட நாடுகள் எதிர்த்துள்ளன
tags;இலங்கை; எதிரான தீர்மானத்தின் மீது நாளை ஓட்டெடுப்பு
Labels:
உலகம்
கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.13,994 கோடி
கொச்சி:நம்நாட்டிலிருந்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கு, கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இவ்வகையில், நடப்பு, 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில், நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 14,040 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே கால ஏற்றுமதியை விட, 6.03 சதவீதம் அதிகமாகும்.
ரூபாய் மதிப்பு:ரூபாய் மதிப்பின் அடிப்படையில், ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்றாலும், அளவு மற்றும் டாலர் மதிப்பு அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது என, கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கீட்டு காலத்தில், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 6,60,703 டன்னாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 2.62 சதவீதம் குறைவாகும்.
இதே போன்று டாலர் மதிப்பின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 8 சதவீதம் சரிவடைந்து, 260 கோடி டாலராக குறைந்து உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவு நிலையால், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில் சற்று உயர்ந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
பொருள் குவிப்பு வரி:அமெரிக்க அரசு, அதன் செலவினங்களை குறைக்கும் வகையில், நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தவிர, அந்நாடு, இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருட்கள் மீது பொருள் குவிப்பு வரி விதித்துள்ளது.மேலும், ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலை மற்றும் கடன் பிரச்னைகள் போன்றவற்றால், ஒட்டு மொத்த அளவில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், கடல் உணவுப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது.
இதன் காரணமாகவே, நடப்பு முழு நிதியாண்டில், நம்நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், இவற்றின் ஏற்றுமதி, 350 கோடி டாலர் (19 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில், அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி குறையும் என, கொச்சியை சேர்ந்த கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜப்பான்:இந்நிலையில், ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்திய கடல் உணவுப் பொருட்களில், "ஆன்டி-ஆக்சிடன்ட் எதாக்ஸின்' என்ற ரசாயனம், கலந்துள்ளது என்ற பிரச்னையால், இவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதற்கு, இன்னும் தீர்வு காணப்பட வில்லை.கடந்த ஆண்டு, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, இந்தியாவிலிருந்து, கடல் உணவுப் பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்வாண்டு, மேற்கண்ட நாடுகளுக்கான ஏற்றுமதி, சிறப்பானஅளவில் அதிகரிக்கவில்லை. இது போன்ற காரணங்களும், நம்நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில், பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இறால்கள்:நம்நாட்டின் ஒட்டு மொத்த கடல் உணவுப் பொருட்கள்ஏற்றுமதி வருவாயில், இறால்களின் பங்களிப்பு, 52 சதவீதமாக உள்ளது. கணக்கீட்டு காலத்தில், இறால் ஏற்றுமதி, 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், சர்வதேச சந்தையில், "வண்ணமே' தவிர்த்த இதர கடல் உணவுப் பொருட்களின் விலை சரிவடைந்துள்ளது.
உலக சந்தையில், ஒரு கிலோ, உயர் வகை "வண்ணமே' வகை இறால் விலை, 400 ரூபாய் என்ற அளவில் உள்ளது.ஆந்திராவில், நெல்லூர், குண்டூர், கோட்டா ஆகிய இடங்களில், "வண்ணமே' இறால்கள், மே மற்றும் ஜூன் மாதங்களில் தான் அதிகளவில் உற்பத்தி யாகின்றன. ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பு ஆண்டில், மேற்கண்ட இடங்களில் இதன் உற்பத்தி, 20 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
tags:கடல் உணவு,ஏற்றுமதி,உணவுப் பொருட்கள்
Labels:
வர்த்தகம்
தமிழ் சினிமா வேண்டாம்: இந்திக்கு செல்லும் மணிரத்தினம்?
அப்படம், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை பின்னணியாகக் கொண்ட, காதல் கதையில் உருவாகிறதாம்.
அப்படத்துக்கு, "ராவணன், குர்பான், ரங்தே பசந்தி போன்ற படங்களுக்கு கதை எழுதிய, பாலிவுட் பட இயக்குனரான, ரென்சில் டி.சில்வா என்பவரே கதை எழுதுகிறாராம். மேலும், வளர்ந்து வரும் இளைய தலைமுறை நடிகர், நடிகைகளுக்கே, இப்படத்தில் வாய்ப்புக் கொடுக்க உள்ளாராம் மணிரத்தினம்.
tags: மணிரத்தினம்,பாலிவுட்,தமிழ் சினிமா
Labels:
சினிமா
இந்தியா அணியில் இருந்து சேவக் நீக்கப்பட்டார் :தேர்வுக் குழு நடவடிக்கை
மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து, அதிரடி "சீனியர்' துவக்க வீரர் சேவக் நீக்கப்பட்டார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-0 என, முன்னிலையில் உள்ளது.
மூன்று (மார்ச் 14-18) மற்றும் நான்காவது (மார்ச் 22-26) டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் ஏமாற்றி வந்த சேவக், 34, அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவர், கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான ஆமதாபாத் டெஸ்டில் சதம் அடித்தார். பின் சொந்த மண்ணில் விளையாடிய 9 இன்னிங்சில், (25, 30, 9, 23, 49, 0, 2, 19, 6) ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.
ஆஸ்திரேலியா சென்ற போது பங்கேற்ற நான்கு டெஸ்டின், 8 இன்னிங்சில் 198 ரன்கள் தான் எடுத்தார். இரு ஆண்டுகளில் ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியின், நான்கு இன்னிங்சிலும் சேர்த்து 27 ரன்கள் தான் எடுத்தார்.
இருப்பினும், இந்திய அணி வெற்றி பெற்றதால், மீதமுள்ள போட்டிகளிலும் சேவக் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய திருப்பமாக சேவக் அணியில் இருந்து நீக்கப்பட்டார். சமீபத்தில் தான் இவரது சக துவக்க வீரர் காம்பிர், மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
சேவக்கிற்குப் பதில் புதியதாக யாரும் சேர்க்கப்படவில்லை. அதாவது 15 பேர் அணி, 14 பேர் அணியாக குறைக்கப்பட்டது. இதனால், முரளி விஜயுடன் சேர்ந்து, மற்றொரு டில்லி வீரர் ஷிகர் தவான் துவக்கம் தரலாம்.
மற்றபடி அணியில் மாற்றம் இல்லை. இரட்டைசதம் அடித்த புஜாரா, விராத் கோஹ்லி அணியில் தொடர்வர். பவுலிங்கில் அஷ்வின், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா கூட்டணியில் மாற்றம் இல்லை. வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா அதிக விக்கெட் வீழ்த்தவில்லை எனினும், புவனேஷ்வருடன் சேர்ந்து நீடிக்கிறார்.
அணி விவரம்: தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), விராத் கோஹ்லி, முரளி விஜய், ஷிகர் தவான், சச்சின், புஜாரா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், ரகானே, பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் மற்றும் டிண்டா.
ஓய்வா... அப்படீன்னா...
இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சேவக் கூறுகையில்,"" கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் கிடையாது. எனது திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடின முயற்சி செய்து மீண்டும் அணியில் இடம் பிடிப்பேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள்,'' என்றார்.
9 ஆண்டுக்குப் பின்...
2004ல் முதல் காம்பிர்-சேவக் இணைந்து, அணிக்கு துவக்கம் கொடுத்தனர். இவர்கள் இணைந்து விளையாடிய 87 இன்னிங்சில், 4412 ரன்கள் (சராசரி 52.52) எடுத்துள்ளனர். சிறந்த துவக்க ஜோடி வரிசையில் 5வது இடம் பெற்றது.
இருவரும் இப்போது நீக்கப்பட, 9 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக இவர்கள் இல்லாமல் முற்றிலும், புதிய ஜோடியுடன் இந்திய அணி மொகாலியில் களமிறங்குகிறது.
மீண்டு வருவார்
சேவக் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஹைடன் கூறுகையில்,"" சக வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கும் கேப்டன்களில் தோனியும் ஒருவர். சில நேரங்களில் கடின முடிவு எடுக்க வேண்டியதாகிறது. சேவக் இப்போது "பார்ம்' இல்லாமல் இருப்பது தற்காலிகமானது தான். இவர் மீண்டு வருவார். என்னைப் பொறுத்தவரை, சேவக் அணிக்கு திரும்பவில்லை என்றால் தான் ஆச்சரியம்,'' என்றார்.
கவாஸ்கர் ஆதரவு
சேவக் நீக்கப்பட்டது குறித்து, முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ""ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள மொகாலி ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சேவக் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். டெஸ்ட் அணியில் இருந்து சேவக்கை நீக்கியதால், இவரது கிரிக்கெட் வாழ்க்கை முற்று பெற்றதாக அர்த்தமில்லை. விரைவில் இழந்த "பார்மை' மீட்டு, டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என நம்புகிறேன். வரும் காலங்களில் இவரை "மிடில்-ஆர்டரில்' களமிறக்கலாம். இவரது அனுபவம், "மிடில்-ஆர்டரில்' நிச்சயம் கைகொடுக்கும்,'' என்றார்.
tags:இந்தியா அணி ,சேவக் ,தேர்வுக் குழு நடவடிக்கை, டெஸ்ட்
Labels:
கிரிக்கெட்
இந்தியாவை எச்சரிக்கவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: ஜெ., குற்றச்சாட்டு
சென்னை: "சர்வதேச அளவில், தனக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்க, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மன்மோகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தின் கேடியக்கரை பகுதியில், நாகபட்டனம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த, 14 மீனவர்கள், இரண்டு மோட்டார் படகுகளில், மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் மீது, இலங்கை கடற்படை, கடந்த, 6ம் தேதி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதில், காரைக்காலை சேர்ந்த மீனவர் செண்பகம் காயம் அடைந்தார். இவரை, உடன் சென்ற மீனவர்கள், நாகபட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இலங்கை கடற்படையினர், அப்பாவி தமிழக மீனவர்கள் மீது, தாக்குதல்களை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன், தூத்துக்குடி மீனவர்கள், 16 பேரை பிடித்துச் சென்று, கோர்ட் காவலில் வைத்துள்ளனர். அமைதியான முறையில் வாழ்வாதரத்தைத் தேடும், தமிழக மீனவர்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற் காக, இலங்கை கடற்படை, இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய, நடத்தி வரும் தாக்குதல்களுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு, சர்வதேச விசாரணை வேண்டும் என, தமிழக அரசியல் கட்சிகள், இந்திய பார்லிமென்டில் வலியுறுத்தி வரும் இந்த நேரத்தில், தமிழக மீனவர்கள் மீது, இலங்கை அரசு தாக்குதல் நடத்தியுள்ளதில், பின்னணி இருப்பதாக கருதப்படுகிறது. ஈழத் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்களுக்கு, சர்வதேச அளவிலான விசாரணையை, இந்திய அரசு கேட்கக் கூடாது என்று எச்சரிப்பதற்காக, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாகவே தெரிகிறது. இலங்கையின் இப்போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பிரச்னையில், மத்திய அரசு மவுன பார்வையாளராக இருக்கக் கூடாது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை, ராணுவத்தின் மூலம் பறிப்பதை நிறுத்த வேண்டும் என, இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்; உறுதியான நடவடிக்கை, உடனடியாகத் தேவை. இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.
tags:சென்னை,தமிழக மீனவர்கள்,முதல்வர் ஜெயலலிதா
Labels:
தமிழகம்
விஸ்வரூபம் விவகாரம்; மீண்டும் பிரச்னையை கிளப்பும் அமீர்!!
விடுதலைப் புலிகளை போலத்தான், தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர், அவர்களை விஸ்வரூபம் படத்தில் தப்பாக சித்தரித்துள்ளனர் என்று கூறியுள்ளார் டைரக்டர் அமீர். பிரச்னைகள் பல கடந்து, தடைகள் பல கடந்து, விஸ்வரூபம் படம் ரிலீஸாகி வசூலிலும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் புதிதாக ஒரு பரபரப்பை கிளப்பி வருகிறார் டைரக்டர் அமீர். அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள். விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் மக்களுக்காவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் போராடும் போராளியை தவறாக சித்தரித்து உள்ளனர்.
இலங்கையில் ஈழத்திற்காக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் எப்படி போராடினார்களோ, அவர்களை தவறாக சித்தரித்தால் என்ன நிகழுமோ அப்படித்தான் விஸ்வரூபம் படமும். எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும், தீவிரவாதிகள் என்று சொல்ல படத்தில் காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள். இப்போது தான் அதுபற்றிய விவாதத்தை வைத்து இருக்க வேண்டும், யாரும் செய்யவில்லை. எனவே விஸ்வரூபம் படத்தில் தன் மண்ணுக்காக போராடும் தலிபான்களை, விஸ்வரூபம் படத்தில் தவறாக சித்தரித்து இருப்பது உண்மை தான் என்று கூறியுள்ளார். அமீரின் இந்த பேச்சு, மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்ப தூண்டுவது போல அமைந்துள்ளது.
tags:விஸ்வரூபம் ; அமீர்,இலங்கை
Labels:
சினிமா
ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம்
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 24.61 புள்ளிகள் அதிகரித்து 19277.22 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 42.15 புள்ளிகள் குறைந்து 5776.45 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததால், சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை வாங்கினர். இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. அமெரிக்காவில் சேவை துறை வளர்ச்சி மேம்பட்டுள்ளது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அதிகரித்து காணப்பட்டது. மேலும், ஐரோப்பிய சந்தைகளிலும் பங்கு வியாபாரம், கடந்த, நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, உயர்வுடன் முடிவடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம், தகவல் தொழில் நுட்ப துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
tags:மும்பை,இந்திய பங்குச்சந்தை,வர்த்தகம், நாட்டின் பங்கு
tags:மும்பை,இந்திய பங்குச்சந்தை,வர்த்தகம், நாட்டின் பங்கு
Labels:
வர்த்தகம்
மிடில் ஆர்டரில் வருவாரா சேவக்: டிராவிட் புது ஆலோசனை
புதுடில்லி: துவக்க வீரராக சொதப்பும் சேவக் குறித்து அணி நிர்வாகம் விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இவரை "மிடில் ஆர்டரில்' களமிறக்கலாம்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் ஆலோசனை தெரிவித்தார்.
சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் "சீனியர்' துவக்க வீரர் சேவக், 34. இவர், கடைசியாக விளையாடிய 9 இன்னிங்சில், (25, 30, 9, 23, 49, 0, 2, 19, 6) ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இதுகுறித்து டிராவிட் கூறியது:
சேவக் போன்ற வீரர் ஒரு அணிக்கு கிடைப்பது பெரிய சொத்து போன்றது. இவர் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை முன்பு வெளிப்படுத்தினார். ஆனால், சமீபகாலமாக தொடர்ந்து சொதப்புகிறார். கடந்த 2, 3 ஆண்டுகளாக அன்னிய மண்ணில் பலமுறை அணியை கைவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய தொடருக்குப் பின், இந்திய அணி அடுத்து வரும் டிசம்பரில் தான் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா செல்கிறது. இத்தொடரில் சேவக்கை தான் துவக்க வீரராக களமிறக்கப் போகின்றார்களா என, பி.சி.சி.ஐ., உடனே முடிவு செய்ய வேண்டும்.
அப்படியெனில், மீதமுள்ள போட்டிக்கு சேவக்கை துவக்க வீரராக தொடர்ந்து விளையாடச் செய்து அவரது நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், சேவக்கை "மிடில் ஆர்டரில்' களமிறக்கலாம்.
சச்சின் விரைவில் ஓய்வு பெற வாய்ப்புள்ள நிலையில், அனுபவ வீரரான சேவக் வருகை "மிடில் ஆர்டருக்கு' பலம் சேர்க்கும். ஏனெனில், இதற்கு முன் அவர் இந்த இடத்தில் விளையாடி உள்ளார். இது தான் தனக்கு பிடித்த இடம் என்றும், சேவக் பலமுறை கூறியுள்ளார்.
இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் துவக்கத்தில் புதிய இளம் வீரர் அணிக்கு வரலாம். நன்கு அறிமுகமான இந்திய ஆடுகளத்தில், இளம் வீரருக்கு இப்போதே வாய்ப்பு தந்து சோதிக்க வேண்டும். அப்போது தான் தென் ஆப்ரிக்க தொடரில் வேகப்பந்து வீச்சில் தாக்குப்பிடித்து களத்தில் நிற்க முடியும்.
அதை விட்டுவிட்டு, நேரடியாக தென் ஆப்ரிக்க சென்று, ஸ்டைன், மார்னே மார்கல், பிலாண்டர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக களமிறக்குவது அழகல்ல.
இவ்வாறு டிராவிட் கூறினார்.
இன்று இந்திய அணி தேர்வு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது. முதல் இரு டெஸ்டில் வெற்றி பெற்றதால், அணியில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது. இதனால், சேவக் அணியில் தொடரலாம்.
tags: சேவக்,கேப்டன் டிராவிட்,புதுடில்லி, டெஸ்ட்
சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் "சீனியர்' துவக்க வீரர் சேவக், 34. இவர், கடைசியாக விளையாடிய 9 இன்னிங்சில், (25, 30, 9, 23, 49, 0, 2, 19, 6) ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இதுகுறித்து டிராவிட் கூறியது:
சேவக் போன்ற வீரர் ஒரு அணிக்கு கிடைப்பது பெரிய சொத்து போன்றது. இவர் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை முன்பு வெளிப்படுத்தினார். ஆனால், சமீபகாலமாக தொடர்ந்து சொதப்புகிறார். கடந்த 2, 3 ஆண்டுகளாக அன்னிய மண்ணில் பலமுறை அணியை கைவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய தொடருக்குப் பின், இந்திய அணி அடுத்து வரும் டிசம்பரில் தான் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா செல்கிறது. இத்தொடரில் சேவக்கை தான் துவக்க வீரராக களமிறக்கப் போகின்றார்களா என, பி.சி.சி.ஐ., உடனே முடிவு செய்ய வேண்டும்.
அப்படியெனில், மீதமுள்ள போட்டிக்கு சேவக்கை துவக்க வீரராக தொடர்ந்து விளையாடச் செய்து அவரது நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், சேவக்கை "மிடில் ஆர்டரில்' களமிறக்கலாம்.
சச்சின் விரைவில் ஓய்வு பெற வாய்ப்புள்ள நிலையில், அனுபவ வீரரான சேவக் வருகை "மிடில் ஆர்டருக்கு' பலம் சேர்க்கும். ஏனெனில், இதற்கு முன் அவர் இந்த இடத்தில் விளையாடி உள்ளார். இது தான் தனக்கு பிடித்த இடம் என்றும், சேவக் பலமுறை கூறியுள்ளார்.
இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் துவக்கத்தில் புதிய இளம் வீரர் அணிக்கு வரலாம். நன்கு அறிமுகமான இந்திய ஆடுகளத்தில், இளம் வீரருக்கு இப்போதே வாய்ப்பு தந்து சோதிக்க வேண்டும். அப்போது தான் தென் ஆப்ரிக்க தொடரில் வேகப்பந்து வீச்சில் தாக்குப்பிடித்து களத்தில் நிற்க முடியும்.
அதை விட்டுவிட்டு, நேரடியாக தென் ஆப்ரிக்க சென்று, ஸ்டைன், மார்னே மார்கல், பிலாண்டர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக களமிறக்குவது அழகல்ல.
இவ்வாறு டிராவிட் கூறினார்.
இன்று இந்திய அணி தேர்வு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது. முதல் இரு டெஸ்டில் வெற்றி பெற்றதால், அணியில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது. இதனால், சேவக் அணியில் தொடரலாம்.
tags: சேவக்,கேப்டன் டிராவிட்,புதுடில்லி, டெஸ்ட்
Labels:
கிரிக்கெட்
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தாமதம்: ஏப்ரல் மாதம் துவங்கும் என மத்திய அரசு தகவல்
புதுடில்லி: ""கூடங்குளம் அணு மின் நிலையத்தில், வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து, மின் உற்பத்தி துவங்கும்,'' என, மத்திய அமைச்சர், நாராயணசாமி கூறினார்.
லோக்சபாவில் நேற்று, பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சர், நாராயணசாமி, எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது: தமிழகத்தின், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தின், முதல் மற்றும் இரண்டாவது யூனிட்டுகள் செயல்படத் தயார் நிலையில் உள்ளன. அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம், முழு அளவிலான பரிசோதனைகளை நடத்தி, முதல் யூனிட் செயல்படுவதற்கு, ஜனவரி, 24ம் தேதி ஒப்புதல் அளித்தது. அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளுடன், இந்திய அணுசக்தி கழக லிட்., அதிகாரிகள் இணைந்து, ஒருங்கிணைந்த பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். இந்த குழுவினர், இதற்காக, ஒன்றரை மாதமாக முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கூடங்குளம் அணு மின் நிலையத்தின், முதல் யூனிட், வரும், ஏப்ரல் மாதத்திலிருந்து மின் உற்பத்தியை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது யூனிட், வரும் அக்டோபரில் மின் உற்பத்தியை துவங்கும். இந்த இரண்டு யூனிட்டுகளிலும், 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இவற்றில், 925 மெகாவாட் மின்சாரம், தமிழகத்துக்கும், 266 மெகாவாட் மின்சாரம், கேரளாவுக்கும், 442 மெகாவாட் மின்சாரம், கர்நாடகாவுக்கும் வழங்கப்படும். புதுச்சேரிக்கு, 67 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும். தமிழகத்துக்கு, கூடுதலாக, 100 மெகாவாட் மின்சாரம் வழங்குவது குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. கடலோர பகுதிகளில் அமைக்கப்படும் அணுமின் நிலையங்களில், அதி நவீன தொழில்நுட்பத்துடன், அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நில நடுக்கம், சுனாமி, புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால், அணுமின் நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள், தொடர்ந்து ஆய்வு செய்வர். இந்த ஆய்வு, சர்வதேச தரத்திலானதாக இருக்கும். பாதுகாப்புக்கு தேவையான அனைத்து விஷயங்களையும், பலப்படுத்தவும், செயல்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நாராயணசாமி அளித்த பதிலில் கூறப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள், கடந்த டிசம்பரில் ஆய்வு நடத்தினர். மின் நிலையத்தில் உள்ள அனைத்து கருவிகளின் செயல்பாடு மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சில கருவிகளில், சிறிய அளவிலான கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மின் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. "பிப்ரவரியில் மின் உற்பத்தி துவங்கும்' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பிரச்னை காரணமாக, திட்டமிட்டபடி, மின் உற்பத்தியை துவங்க முடியவில்லை. தற்போது, "ஏப்ரல் மாதம் முதல், மின் உற்பத்தி துவங்கும்' என, முறைப்படி, லோக்சபாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
tags:கூடங்குளம் ,அணு மின் ,புதுடில்லி:
Labels:
இந்தியா
நான்காம் பிறை விமர்சனம்
நடிகர் : கிருஷ்ணா
நடிகை : மோனல் கஜார்
இயக்குனர் :வினயன்
விமர்சனம்
இதுநாள் வரை ஹாலிவுட் படங்களிலேயே மனித இரத்தம் குடிக்கும் டிராகுலா எனும் ஓநாய் பேய்களை கண்டு வந்த தமிழ் ரசிகர்களுக்கு, முதன்முதலாக தமிழில் ஒரு டிராகுலா பேய் படம்! விக்ரம் நடித்து வெளிவந்த "காசி" உள்ளிட்ட தமிழ்படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் வினயனின் வித்தியாசமும், விறுவிறுப்புமான இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 3டி படம்தான் "நான்காம் பிறை!"
கதைப்படி, ருமேனியா நாட்டிற்கு, தனது ரகசிய டிராகுலா ஆராய்ச்சிக்காவும், கூடவே தன் புதுமனைவியுடனான ஹனிமூனுக்காவும் செல்லும் ராய் எனும் இளைஞனின் உடம்பில் உட்புகுந்து கொள்ளுகிறான் டிராகுலா இனத்தின் தலைவன்! இந்தியாவில் ஒரு புகழ்பெற்ற ஆன்மிகம் கம் மாந்திரீகவாதி வீட்டில் மறுபிறப்பு எடுத்திருக்கும் தன் காதல் இளவரசியை, ராய் உருவத்தின் மூலம் அடைந்து, அவளையும் கழுத்தோரம் கடித்து, டிராகுலா பேயாக்கி, தங்களது டிராகுலா உலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்பது டிராகுலா தலைவனின் திட்டம். இதற்காக ராயின் புது மனைவியில் தொடங்கி டிராகுலா இளவரசியின் அக்கா, அப்பா உள்ளிட்ட இன்னும் பலரையும் படிப்படியாக தீர்த்து கட்டும் டிராகுலா தலைவன் அலைஸ் ராயின் திட்டத்தை புரிந்து அதை முறியடிக்க முயற்சிக்கின்றனர் டிராகுலாவின் காதல் இளவரசியின் இப்பிறவி காதலன் புதுமுகம் ஆர்யன், டிராகுலா சைன்டிஸ்ட் பிரபு, மாந்திரீகவாதி நாசர் மற்றும் இளம் போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர்...! இறுதி வெற்றி யாருக்கு...? என்பது க்ளைமாக்ஸ்!!
டிராகுலா வேடத்தில் ராய் எனும் கேரக்டரிலும், டிசோசா எனும் பேராசிரியர் ரோலிலும் மாறி மாறி நடிகர் சுதிர் நம்மை பயமுறுத்தி இருக்கிறார் பலே, பலே!
டிராகுலாவின் காதல் இளவரசி மோனல் கஜாரும், அவரது அழகிய அக்காவாக வந்து டிராகுலாவால் கொல்லப்படும் ஷரத்தா தாஸூம் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். 3டியில் இருந்த இருவரது அங்க அவையங்களும் நம் கண்களுக்கு நேரடி பிரமாண்டத்தையும், பிரமிப்பையும் தருவது படத்தின் பெரும்பலம்!
டிராகுலா சைன்டீஸ் பிரபு, ஆன்மிகம் கம் மாந்திரீகவாதி நாசர், டிராகுலா புகழ்பாடும் வயதான டிராகுலா திலகன், மோனல் கஜ்ஜாரின் காதலன் புதுமுகம் ஆர்யன், பிரியா, ஸ்வேதா உள்ளிட்டோரும் படத்திற்கும் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கின்றனர்.
காமெடி போலீஸ் கஞ்சா கருப்பு "கடிக்கிறார். பிரபு, நாசர் தவிர்த்து பெரும்பாலும் மாலையாள நட்சத்திர முகங்களே தெரிவது குறையாகிவிடக்கூடாது என்பதற்காக இவரது காமெடி "ஓ... சாரி கடியையும் விலிய திணித்திருப்பதை இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!
சதீஷ்பாபுவின் ஒளிப்பதிவும், பிபத் ஜார்ஜின் பின்னணி இசையும் ரசிகர்களை மேலும் பயமுறுத்துவது படத்தின் பலம்! பாடல் காட்சிகள் நச் என்று இருந்தாலும் ஹாரர் படத்தில் பாட்டு - டூயட்டெல்லாம் தேவையா? எனக் கேட்க தோன்றுகிறது. சி.ஜி., கலர் கரைக்ஷ்ன் மற்றும் கிராபிக்ஸ் வேலைகளில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் "நான்காம் பிறை நம்பக்கூடிய பிறையாக இருந்திருக்கும்!
வினயனின் எழுத்திலும், இயக்கத்திலும் இன்னும் நிறைய எதிர்பார்த்தோம் என்றாலும் "நான்காம் பிறை", தமிழ் டிராகுலா ஹாரர் கதைகளுக்கான "வளர் பிறை"
tags:விமர்சனம்,நான்காம் பிறை
Labels:
விமர்சனம்
‘நோ பயர் ஸோன்’ படத்திற்கு யாரிடமும் பணம் வாங்கவில்லை.. சேனல் 4 விளக்கம்
tags:‘நோ பயர் ஸோன்’,ஜெனிவா,இலங்கை போர்
Labels:
உலகம்
ஐபில் நிதி முறைகேடு... ப்ரீத்தி ஜிந்தாவிடம் அமலாக்க அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை
மும்பை: இந்தியன் பிரீமியர் லீக்கின் 2வது சீசன் போட்டித் தொடரின்போது நடந்த நிதி முறைகேடுகள் குறித்து நடிகையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தாவிடம் அமலாக்ப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின்போது ப்ரீத்தி சொன்ன தகவல்களை அதிகாரிகள் பதி்வு செய்து கொண்டனர். கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது. இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், விசாரணைக்கு வருமாறு ப்ரீத்திக்கு சம்மன் அனுப்பியிருந்தோம். அவரும் வந்து ஒத்துழைப்பு கொடுத்தார் என்றார். இதற்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர், முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர் ஷாருக் கான் ஆகியோரும் அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். தென் ஆப்பிரிக்காவில் 2009ம் ஆண்டு 2வது ஐபிஎல் தொடர் நடந்தது. அப்போது அந்தத் தொடரில் முறைகேடான நிதி பெருமளவில் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து இந்தத் தொடருக்காக செலவழிக்கப்பட்ட நிதி குறித்த விசாரணையை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக முன்னாள் ஐபிஎல் கமிஷனரான லலித் மோடிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் லண்டனுக்கு ஓடிப் போய் விட்டார்.
tags:ஐபில் நிதி முறைகேடு, ப்ரீத்தி ஜிந்தா,அமலாக்ப் பிரிவு
Labels:
விளையாட்டு
ஹெலிகாப்டர் ஊழல்: மாஜி தளபதி தியாகியிடம் நாளை சிபிஐ விசாரணை- சகோதரர்களிடம் இன்று விசாரணை
டெல்லி: விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் விமானப்படை தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகியிடம் நாளை சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. அதற்கு முன்பாக இன்று தியாகியின் சகோதரர்கள் மூவரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தியாகியின் சார்பில் இவர்கள்தான் லஞ்சப் பணத்தை வாங்கினார்கள் என்பது குற்றச்சாட்டு. அதுதொடர்பாக இந்த மூவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
தியாகியிடம் நாளை சிபிஐ விசாரணை நடைபெறவுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்கனவே மறுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட தியாகியின் சகோதரர்களான ஜூலி, ராஜீவ் மற்றும் டோஸ்கா தியாகி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடத்து வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டு இத்தாலியின் பின்மெக்கானிகா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேன்ட்டிடமிருந்து ரூ. 4000 கோடி மதிப்பிலான 12 ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா முயற்சி மேற்கொண்டது இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக இத்தாலியில் சர்ச்சை கிளம்பியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய இத்தாலிய அதிகாரிகள், முன்னாள் விமானப்படைத் தலைவர் எஸ்.பி.தியாகியின் சகோதரர்கள்தான் இதில், தியாகி சார்பில் இடைத்தரகர்களிடமிருந்து லஞ்சப் பணத்தைப் பெற்றதாக குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒரு இடைத்தரகரான குய்டோ ஹெஸ்கி இதுகுறித்து கூறுகையில்,தியாகியின் சகோதரர்களிடம் 1 லட்சம் ஈரோ பணத்தைக் கொடுத்ததாக தெரிவித்தார். இப்பணத்தின் ஒரு பகுதி தியாகியிடமே நேரடியாகப் போய்ச் சேர்ந்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் இதை தியாகி மறுத்துள்ளார். தான் ஓய்வு பெற்று 3 ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது அவரது வாதமாகும். ஆனால் ஹெலிகாப்டர் வாங்கிய விவகாரத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ ஆணித்தரமாக கூறியுள்ளது.
tags:டெல்லி,ஹெலிகாப்டர், சிபிஐ விசாரணை
Labels:
இந்தியா
ஓவரா நிர்வாணம் காட்றாங்க...! - அனுஷ்கா, ப்ரியாமணி மீது பொது நல வழக்கு
அனுஷ்கா-ப்ரியாமணி இருவருமே நல்ல திறமையான நடிகைகள் என்பதை சில படங்களில் நிரூபித்து விட்டார்கள். என்றாலும் அவர்களின் திறமைக்கேற்ற தீனி போடத்தான் இயக்குனர்கள் இல்லை. பெரும்பாலான இயக்குனர்கள் அவர்களின் கவர்ச்சியை குறிவைத்தே வாய்ப்புக்கொடுத்து வருகின்றனர். அப்படி நடிப்பதற்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கிறார்களாம். அதனால்தான் காசு விசயத்தில் கஞ்சத்தனம் செய்யும் கோடம்பாக்கத்தில் அடக்கிவாசிக்கும் மேற்படி நடிகைகள், ஆந்திராவில் தங்களுக்கு அள்ளிக்கொடுப்பதால், அவர்களது எதிர்பார்ப்பறிந்து கவர்ச்சியை மானாவாரியாக வாரி வழங்குகிறார்களாம்.
அந்த வகையில், தற்போது அனுஷ்கா நடிப்பில் ஆந்திராவில் வெளியான மிர்ச்சி படத்திலும், ப்ரியாமணி நடிப்பில் வெளியான டிக்கா படத்திலும் கிட்டத்தட்ட மேற்படி அம்மணிகள் கவர்ச்சியின் எல்லையையே தொட்டு விட்டார்களாம். துக்கடா டிரஸ் அணிந்து அவர்கள் நடித்ததால்,இளவட்ட ரசிகர்களின் கூட்டம் மேற்படி படங்களுக்கு அலைமோதியதாம். இதன்காரணமாக, ஆந்திரதேசத்து சமூக ஆர்வலர்கள் மேற்படி நடிகைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு பொதுநலன் கருதி, அனுஷ்கா-ப்ரியாமணி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களாம். இதனால் அனுஷ்கா-ப்ரியாமணி இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
tags:அனுஷ்கா,ப்ரியாமணி,கவர்ச்சி,துக்கடா டிரஸ், நீதிமன்றத்தில் வழக்குத்,ரசிகர்களின் கூட்டம்
Labels:
சினிமா
400 ஆண்டுகளுக்கு தடையில்லா மின்சாரம்: கைவசம் இருக்கு தோரியம
தேனி: ""நம்நாட்டில், 400 ஆண்டுக்கு மின்சாரம் தயாரிக்க தேவையான தோரியம், தமிழக, கேரள கடலோரங்களில் குவிந்து உள்ளன,'' என, பாபா அணு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி, டேனியல் செல்லப்பா தெரிவித்தார்.
தேனி கம்மவார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுடன், கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர் கூறியதாவது: நீர், அனல் மின்நிலையங்கள் சில ஆண்டுகளுக்கு மட்டுமே பலன் தரக்கூடியவை. இன்னும் சில ஆண்டுகளில், இந்த மின்நிலையங்களை செயல்படுத்த முடியாது; அணு மின்நிலையம், அப்படியல்ல. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், நமக்கு தேவையான அளவு மின்சாரத்தை அணு சக்தி மூலம் பெற முடியும். அமெரிக்காவில், சராசரியாக ஒரு நபர், ஆண்டிற்கு 12 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்துகிறார்; ஐரோப்பிய நாடுகளில், 6,000 யூனிட் பயன்படுத்துகின்றனர்; நம் நாட்டில், ஒரு நபர் 660 யூனிட் மட்டுமே பயன்படுத்துகிறார். இந்த தேவைக்கு கூட, மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. அனல், நீர் மின்நிலையங்கள் மூலம், தமிழகத்திற்கு தினமும் 5500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது; மத்திய தொகுப்பில் இருந்து 3000 மெகாவாட் கிடைக்கிறது. தினமும் 3500 மெகாவாட்டிற்கு மேல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண, அணுமின்சாரமே எளிதானது. கன்னியாகுமரி மணவாளக்குறிச்சி கடற்கரை பகுதிகளிலும், கேரளா ஜாராகுஷா கடற்கரையிலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் தோரியம் அதிகம் உள்ளது. தோரியத்தை, யுரேனியமாக மாற்றி மின்சாரம் தயாரிக்கலாம்.
வரும் 400 ஆண்டுகளுக்கு, நம் நாட்டின் தேவைக்கு ஏற்ப மின்சாரம் தயாரிக்கும் அளவில், தோரியம் இருப்பு உள்ளது. அதிக மின்சாரம் தயாரிக்கப்படும் போது, பெட்ரோல், டீசல் தேவையை குறைத்துக் கொள்ள முடியும். மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். அணுமின் சக்தி மூலம் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு எளிதான தீர்வு காண முடியும். உணவுப்பதப்படுத்தும் தொழிலில் அணு, சிறந்த தொழில்நுட்பமாக மாறி வருகிறது. அணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த முடியும். எதிர்காலத்தில், ஆக்சிஜன் சிலிண்டர்களை முதுகில் கட்டிக்கொண்டு அலைய நேரிடலாம். இவ்வாறு பேசினார். கல்லூரி செயலாளர் தாமோதரன், முதல்வர் ராஜாமணி, துணை முதல்வர் துரைக்கண்ணன் பங்கேற்றனர்.
tags:மின்சாரம்,அணு மின்நிலையம்,பெட்ரோல், டீசல்
Labels:
தமிழகம்
வி.ஏ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி வீணாகும் அவலம்
தமிழகம் முழுவதும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி, யாருக்கும் பயனின்றி வீணாகிறது.
தமிழகத்தில், 12,500 வருவாய் கிராமங்கள் உள்ளன. 1981ம் ஆண்டு, ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும், ஒரு கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டார். தற்போது, 9,000 கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டும் பணிபுரிகின்றனர். ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை, கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். கிராம நிர்வாக அலுவலர்களுக்காக, வருவாய் கிராமத்தில், வளர்ச்சி திட்டப்பணி மூலம், அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கிராம கணக்குகளை பாதுகாக்கவும், பொதுமக்கள் வந்து செல்லவும், அரசு திட்டங்களை செயல்படுத்தவும், அலுவலகம் பயனுள்ளதாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக, கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சான்றிதழ்:
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான, ஜாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு, இறப்பு, சொத்து மதிப்பு போன்ற சான்றிதழ்களைப் பெறவும், உட்பிரிவு பட்டா, பட்டா பெயர் மாற்றம், சிட்டா, கணிணி பட்டா ஆகியவற்றை பெற, கிராம நிர்வாக அலுவலர்களை அணுக வேண்டியுள்ளது. அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில், வட்டாட்சியர் அலுவலகத்தில், சானறிதழ்கள் வழங்கப்படும். எனவே, கிராம நிர்வாக அலுவலர்கள், தினமும் கிராமத்திற்கு செல்ல வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர், கிராமங்களில் புலதணிக்கை செய்யும் போது, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர், கிராம கணக்குகளுடன் செல்ல வேண்டும். தேவைப்படும் போது, கணக்குகளை உயர் அதிகாரிகளுக்கு காண்பிக்க வேண்டும். எனவே, அடிக்கடி ஆவணங்களை வெளியில் எடுத்து செல்லுவதும், திரும்ப கொண்டு வருவதும் சிரமமாக இருந்தது.
மடிக்கணினி விநியோகம்:
இப்பிரச்னைக்கு தீர்வுகாண, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, அரசு மடிக்கணினி வழங்கியது. அத்துடன், பிரின்டரும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு மடிக்கணினி பயன்பாடு குறித்து, பயிற்சியும் அளிக்கப்பட்டது. மடிக்கணினி வழங்கப்பட்டு ஓராண்டாகியும், கிராம கணக்குகள் குறித்த விபரம் இதுவரை, மடிக்கணினியில் பதிவு செய்யப்படவில்லை; "நெட்ஒர்க்' இணைப்பும் வழங்கப்படவில்லை. இதனால், கிராம நிர்வாக அலுவலர்கள், மடிக்கணினி இருந்தும், பழைய கணக்குகள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது: மடிக்கணிணி மற்றும் பிரின்டர் கொடுத்த வருவாய் துறையினர், பயன்பாடு குறித்த விவரத்தை தெரிவிக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள், எந்த ஆவணத்தையும், வட்டாட்சியருக்கு, ஆன்லைன் மூலம் நேரடையாக தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தவில்லை; வருவாய் ஆய்வாளர் மூலமாகத் தான் தெரிவிக்க வேண்டி உள்ளது. ஆனால், வருவாய் ஆய்வாளருக்கு மடிக்கணிணி வழங்கவில்லை; இதனால், மடிக்கணினி பயனில்லாமல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Labels:
தமிழகம்
10ம் வகுப்பு கணித வினாத்தாளில் மாற்றம்: 100/100 அள்ளலாம்
மதுரை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணித வினாக்கள் அமைப்பில், இந்தாண்டு தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தாண்டு கணிதத்தில் "நூற்றுக்கு நூறு" மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு தேர்வு துறை அனுப்பிய சுற்றறிக்கை: கணித வினாத்தாளில் ஒரு மார்க் பகுதியில், 15 வினாக்கள் கேட்கப்படும். இதில், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வினாக்களில் இருந்து 10ம், யோசித்து பதில் எழுதுமாறு 5 கேள்விகளும் இருந்தது. இது மாற்றப்பட்டு, 15 வினாக்களும் புத்தகத்தில் உள்ள கேள்விகளே கேட்கப்படும்.
கட்டாயம் விடையளிக்கும், 2 மார்க் பகுதியில் 30வது கேள்வியும், 5 மார்க் பகுதியில் 45வது கேள்வியும் மாணவர்கள் கடினமான பகுதியாக நினைக்கும் இயற்கணிதம், எண் தொடர், அளவீடுகள் ( 2, 3, 5 மற்றும் 8வது பாடங்கள்) பகுதியில் இருந்து மட்டும் கேட்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு 10 பாடங்களிலும் இருந்தும், யோசித்து எழுதாத வகையிலும் கேள்விகள் கேட்கப்படும்.
இரண்டு மார்க் மற்றும் 5 மார்க் பகுதியில் தலா 2 கேள்விகள் யோசித்து விடையளிக்கும் வகையில் இருக்கும். இந்தாண்டு முதல் இந்த முறை தவிர்த்து, புத்தகத்தில் இடம் பெற்ற கேள்விகள் இடம் பெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்றாண்டு கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு, யோசித்து விடையளிக்கும் எழுதும் வகையில் அதிக வினாக்கள் இடம்பெற்றதே காரணம்.
tags:10 std,sslc,score 100/100
Labels:
கல்வி
கற்பழிப்பில் பலியான மாணவிக்கு வீரமங்கைவிருது; சர்வதேச பெண்கள் தினத்தில் அமெரிக்கா கவுரவம்
வாஷிங்டன்: கடந்த நவம்பர் மாதம் டில்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவிக்கு வீரமங்கை விருதை அமெரிக்ககா வழங்குகிறது. வரும் சர்வேதச பெண்கள் தினமான 8ம் தேதியன்று வாஷிங்டனில் நடக்கும் விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா மனைவி மிக்சேல் ஒபாமா வழங்குகிறார்.
ஆண்டுதோறும் பெண்கள் தினத்தன்று பெண்களை கவுரவப்படுத்தும் விதமாக சர்வேதச அளவில் 10 பெண்களை தேர்வு செய்யப்படுவர். இதன் படி 10 பெண்கள் பட்டியலில் டில்லி மருத்துவமாணவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டில்லியில் ஓடும் பஸ்சில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தபோது மருத்துவ மாணவியை ஒரு கும்பல் கொடூரமாக கற்பழித்தனர். இந்நேரத்தில் இந்த மாணவி தனது கற்பை காப்பாற்ற கடுமையாக போராடினார். இந்த கும்பலுடன் ஏற்பட்ட தாக்குதலில் கொடுங்காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ட்டார். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் வெடித்தது. இதில் டில்லி நகரமே ஸ்தம்பித்து போனது. இந்த சம்பவத்திற்கு பின்னர் கற்பழிப்பில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டு சட்டம் கடுமையாக்கப்பட்டது.
மத்திய அரசின் உதவியுடன் சிங்கப்பூரில் வைத்து சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாணவி இறந்தார். இந்நிலையில் அவரது வீரப்போராட்டத்தை பாராட்டி வீரமங்கை விருதை அமெரிக்க அரசு வழங்குகிறது. இந்த விருதை மாணவியில் பெற்றோர்கள் சார்பில் அமெரிக்காவில் பெறுவர்.
அமெரிக்க விருதை பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான நஜ்மல் ஹெப்துல்லா வரவேற்றுள்ளார்.
tags:டில்லியில் ஓடும் பஸ்சில், மாணவி
Labels:
உலகம்
ஆஸ்திரேலிய அணிக்கு தொடர் மிரட்டல்: இந்தியாவுக்கு கிடைத்த இன்னிங்ஸ் வெற்றி !
ஐதராபாத்: ஆஸி.,க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைத்துள்ளது. இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்த புஜாரா ( இரட்டை சதம் ) ஜடேஜா ( 3 விக்கெட் ) , அஸ்வின் (5 விக்கெட்) வீழ்த்தி பெரும் துணையாக இருந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. தவிர, டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆஸி.,க்கு மீண்டும் அடி :
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 237/9 ரன்கள், இந்தியா 503 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. கோவன் (26), வாட்சன் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜடேஜா அசத்தல்:
நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த, ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (9) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் கிளார்க் (16) ஜடேஜா "சுழலில்' சரணடைந்தார். எதிர்முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவன் (44) ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அஷ்வின் அபாரம்:
பின் வந்த ஹென்ரிக்சை (0) ஜடேஜா "ரன் அவுட்'டாக்கினார். வேட் (10), மேக்ஸ்வெல் (8) ஆகியோரை அஷ்வின் வெளியேற்றினார். அடுத்து வந்த பட்டின்சனும் (0) அஷ்வினிடம் சரணடைய, இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 135 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட் கைப்பற்றினார். ஜடேஜா 3 விக்கெட் சாய்த்தார். இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.ஆட்டநாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது சிறந்த வெற்றி:
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா, 2-0 என முன்னிலை பெற்றது. தவிர, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1998ல் கோல்கட்டாவில் நடந்த டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோனி "நம்பர்-1' :
இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன்கள் வரிசையில், முன்னாள் கேப்டன் கங்குலியை (49 டெஸ்ட், 21 வெற்றி), பின்னுக்கு தள்ளி தோனி (45 டெஸ்ட், 22 வெற்றி) முதலிடம் பிடித்தார்.
மோசமான ஸ்கோர் :
இரண்டாவது இன்னிங்சில் 131 ரன்களுக்கு "ஆல் அவுட்டான' ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக தனது, 5வது மோசமான டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 2004ல் மும்பையில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 93 ரன்களுக்கு "ஆல் அவுட்டானது'.
tags:இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்,ஆஸ்திரேலிய அணி,
Labels:
விளையாட்டு
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை ரூ.5 லட்சம்
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5.06 லட்சம் கோடி ரூபாயாக (9,200 கோடி டாலர்) அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5 சதவீதமாக அதிகரிக்கும் என, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் தெரிவித்துள்ளது.
Œரக்குகள்:இது, மறு மதிப்பீட்டு அளவான, 4.1 சதவீதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின், சேவைகள் மற்றும் சரக்குகள் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ளது.குறிப்பாக, கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அந்த அளவிற்கு, இந்தியாவின் ஏற்றுமதி உயரவில்லை.நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் மாத காலாண்டில், நாட்டின் , நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5.4 சதவீதமாக அதிகரித்திருந்தது. எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பே, ஒட்டு மொத்த இறக்குமதி உயர்விற்கு காரணமாகும். இது, 2014ம் ஆண்டு வரை தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், நாட்டின் எண்ணெய் இறக்குமதி, 14 ஆயிரம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, எண்ணெய் அமைச்சகத்தின் மதிப்பீட்டு அளவான (எரிவாயுவையும் சேர்த்து), 12,700 கோடி டாலரை விட அதிகமாகும்.இருப்பினும், வரும் 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.8 சதவீதமாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கணக்கீட்டு நிதியாண்டில், நிலக்கரி மற்றும் தங்கம் இறக்குமதி கட்டுக்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பங்கு முதலீடு:நாட்டின் நடப்பு கணக்கு :பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டுமானால், ரிசர்வ் வங்கி, ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதாவது, அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீட்டை அதிகரித்தல், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கடன் பத்திரங்களை வெளியிடுதல் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய கடன் பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கான உச்ச வரம்பை உயர்த்துதல் போன்றவற்றையும் நடைமுறைப் படுத்த வேண்டும்.
tags:buseness,இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை ரூ.5 லட்சம்,இந்தியாவின் நடப்பு கணக்கு
Labels:
வர்த்தகம்
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்!
டெல்லி: இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறார் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி.
உலகப் பெரும் பணக்காரர்களை அவர்களின் சொத்து மதிப்பின்படி பட்டியலிடும் 'போர்ப்ஸ்' பத்திரிகை இந்த ஆண்டின் பணக்காரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது.
முதல் 21 இடங்களில் இந்திய கோடீஸ்வரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
tags:முகேஷ் அம்பானி,இந்திய பணக்காரர்கள்
Labels:
இந்தியா
வலுவான நிலையில் இந்தியா
ஐதராபாத்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், 7 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி செல்கிறது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 237 ரன்கள், இந்தியா 503 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. கோவன் (26), வாட்சன் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜடேஜா அசத்தல்: நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த, ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (9) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் கிளார்க் (16) ஜடேஜா "சுழலில்' சரணடைந்தார். எதிர்முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவன் (44) ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். மேக்ஸ்வெல் (8) ஏமாற்றினார். பின் வந்த ஹென்ரிக்சை (0) ஜடேஜா "ரன்அவுட்டாக்க', நான்காவது நாள் உணவு இடைவேளைக்கு முன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து தடுமாறிவருகிறது. வேட் (3), அவுட்டாகாமல் இருந்தனர்.
tags: india,first place india,இந்திய கிரிக்கெட் புஜரா
Labels:
விளையாட்டு
அமெரிக்க மாப்பிள்ளை தயார்... திருமணத்துக்குத் தயாராகும் அசின்?
அமெரிக்காவில் செட்டிலாகியுள்ள கோடீஸ்வர இந்திய இளைஞரை அசின் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யத் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கோலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த அசின், மும்பையில் செட்டிலாகிவிட்டார். 6 இந்திப் படங்களில் இதுவரை அவர் நடித்துள்ளார். அவற்றில் நான்கு படங்கள் ரூ 100 கோடிக்கும் மேல் வசூலித்தவை. ஆனாலும் அசின் புதிய படங்கள் எதையும் இப்போது ஒப்புக் கொள்ளவில்லை. தமிழில் மட்டும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் அவரை நடிக்க வைக்க பேசி வருகிறார்கள். இதற்கிடையே அசின் கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒரு முறையாவது அமெரிக்கா சென்று வருவது வழக்கமாகிவிட்டது. அங்குதான் அசினின் உள்ளம் கவர்ந்த இளைஞர் இருக்கிறாராம். அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், புதிய படங்களை அசின் ஒப்புக் கொள்ளாமல் தவிர்ப்பதன் ரகசியம் இதுதான் என்கிறார்கள் பாலிவுட்டில். கடைசியாக தமிழில் ஒரு படம் நடித்துவிட்டு திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட திட்டமிட்டிருக்கிறார் அசின் என்கிறார்கள்.
tags:அசின், காதல்,திருமணம்
Labels:
சினிமா
ராஜபக்சே தலைக்கு ரூ.1 கோடி பரிசு: மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு
மதுரை: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பாகவும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் (MMBA) பீட்டர் ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும். மேலும், ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமியை தமிழகத்தில் யார், எங்கு பார்த்தாலும், அவரை அந்த இடத்திலேயே அடிக்க வேண்டும் என்றார். முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சே மற்றும் இறுதிக் கட்ட போரில் பங்கேற்ற இலங்கை ராணுவ தளபதிகள் உள்ளிட்டோரை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி தமிழகத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு சர்வதேச நீதிமன்றம் மூலமாக உரிய நிவாரணம் பெற்றுத்தர இந்தியா முயற்சிக்க வேண்டும். சர்வதேச உண்மை கண்டறியும் குழுவை இலங்கைக்கு அனுப்பி, 2009ம் ஆண்டிலிருந்து அங்கு நிகழ்ந்த போர்க்குற்ற அத்துமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச போர்க்குற்றவாளிகளான ராஜபக்சே உள்ளிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
tags:ராஜபக்சே, பரிசு, மதுரை
tags:ராஜபக்சே, பரிசு, மதுரை
Labels:
தமிழகம்
அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்: கருணாநிதி
சென்னை: ""அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மணிவிழா மலரை, கருணாநிதி நேற்று வெளியிட்டார். அவரது பேட்டி:இலங்கைப் பிரச்னையில், தி.மு.க.,வின் கோரிக்கையை பலமுறை வற்புறுத்தி சுட்டிக் காட்டியிருக்கிறோம். தொடர்ந்து வலியுறுத்துவோம். எங்கள் உணர்வுகளை உணர்ந்து, மத்திய அரசு செயல்படும் என, நம்புகிறோம். நாங்கள் மாத்திரமல்ல; உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்தியா எடுக்கும் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.டில்லியில் 7ம் தேதி நடைபெறும், "டெசோ' கருத்தரங்கத்தில், காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என, அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கிறோம்.இலங்கை செயலைக் கண்டிக்கும், அமெரிக்காவின் தீர்மானத்தை, இந்தியாவே முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென, நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். நான் எழுதியும் இருக்கிறேன். அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும்.இந்தியாவே தீர்மானம் கொண்டு வந்தால், அது இந்திய நாட்டின் கடமை உணர்ச்சியையும், உலகத் தமிழர்களின் உள்ள உணர்வுகளையும் எதிரொலிப்பதாக அமையும். இந்தத் தீர்மானத்தின் மீது, இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை, தமிழக மக்கள் அக்கறையோடு கவனிக்கின்றனர்; நாங்களும் தான்.மது விலக்கு சாத்தியம் இல்லை என்பதற்கு, பல சான்றுகளையே ஏற்கனவே அளித்திருக்கிறோம். சாத்தியம் இல்லை என்பதற்காக, நல்ல காரியங்களை விட்டு விட முடியாது. அளவுக்கு மீறி மது பழக்கத்தையும், அதைப் பயன்படுத்துவதையும் அனுமதிக்க வேண்டுமா? என்ற கேள்விக்குத் தான் சமூக ஆர்வலர்களும், அரசு நடத்துகிறவர்களும் விடையளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
tags:dr kalaigner, sri lanka,
Labels:
அரசியல்
Subscribe to:
Posts (Atom)